உதயநிதி குறித்த சர்ச்சை பேச்சு… பவன் மீது பறக்கு புகார்கள்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்தியதாகக் கூறி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Oct 11, 2024 - 03:16
Oct 11, 2024 - 03:17
 0
உதயநிதி குறித்த சர்ச்சை பேச்சு… பவன் மீது பறக்கு புகார்கள்!

அண்மையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், “சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்” என்று மறைமுகமாக தமிழக துணை முதலமைச்சரை விமர்சித்திருந்தார். இப்படி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து இருந்தது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக ஆந்திராவில் உதயநிதி ஸ்டாலினை கண்டிக்கும் வகையிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அந்த போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின் படத்தின் மீது மிதித்து இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. 

இந்நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், ”அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் பவன் கல்யாண் பேச்சு, ஆந்திர மாநில ஒரு தரப்பினரின் செயலால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆந்திர மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து இருக்கிறது. ஆகவே பவன் கல்யாண் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow