நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது - திருமாவளவன் பேச்சு

நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Jan 11, 2025 - 15:54
Jan 11, 2025 - 16:32
 0
நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது - திருமாவளவன் பேச்சு
நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது - திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சென்னை எம்.ஆர்.சி நகர் அம்பேத்கர் மணிமண்டபத்தில்  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தனது திருமணம் முடிந்த கையோடு ராப் பாடகர் அறிவு, அம்பேத்கர் மணிமண்டபம் வந்து திருமாவளவனுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். 

அம்பேத்கர் குறித்து திருமாவளவன் முன்னிலையில், ராப் பாடலையும் தெருக்குரல் அறிவு பாடினார். அப்போது திருமாவளவனும் சேர்ந்து பாடினார். தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த திருமாவளவன் மற்றும் கட்சியினர் வீர வணக்கம் கோஷமிட்டு இனிப்புகளையும் பரிமாறி கொண்டனர். விசிக தொண்டர்களுக்கும் திருமாவளவன் இனிப்பு வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவித்தவர், இந்த அங்கீகாரத்தை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன். தோழமைக் கட்சி திராவிட முன்னேற்றக் கழக முன்னேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்தாண்டு காலம் தேர்தலில் போட்டியிடாமல் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தோம் 25 ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளோம் கால் நூற்றாண்டை நிறைவு செய்து பணிகளை அங்கீகரித்து தமிழ்நாடு மக்கள் மகத்தான அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள். தமிழ்நாடு மக்களுக்கு இந்த நம்பிக்கையின் பாத்திரமாக விளங்குவோம் நம் நாட்டு மக்களின் நன்மைகளுக்காக இன்னும் தீவிரமாக களப்பணி ஆற்றுவோம்.  

விடுதலை சிறுத்தைகள் மகத்தான அரசியல் சக்தியாக இதன் மூலம் உறுதி செய்துள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நம்பிக்கைக்குரிய 
இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் வலுப்பெறும்.  

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். வேட்பாளர் சந்திரகுமார் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தை திமுக ஒருங்கிணைக்கும் என்று நம்புகிறேன். 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுவதாக தவெக தலைவர் விஜய் கூறியது குறித்து பேசியவர், நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு  தான்தோன்றித்தனமாக இது போன்ற நிலைப்பாடுகளை எடுத்து மாநில அரசுகளை புறந்தள்ளி வருகிறது. 

என்றாலும் கூட தேர்தலில் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்ற வாக்குறுதியை தந்தார்கள். இதற்காக சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பியும் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது அல்லது எதிராக இருப்பது இந்திய ஒன்றிய அரசுதான் என்பதை தவெக தலைவர் அறிந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. 

இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டும் என்பதுதான் முறை தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்திருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு அதை தவிர்க்கிறது. நீட் தேர்வு ரகசியம் குறித்து துணை முதல்வர் தான் சொல்ல வேண்டும். 

பெரியார் குறித்து சீமான் பேசியது தொடர்பான கேள்விக்கு, அவருக்கு அவர் எதிராக அவரே செயல்பட்டு வருகிறார் தனக்குத்தானே எதிர்த்துக் கொள்கிறார். இந்த அரசியல் அவருக்கு எதிராகவே முடியும். தமிழ் தேசியம் என்பது பெரியார் எதிர்ப்பாக சுருங்கிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அவர் தமிழ் தேசியத்தைப் பேசவில்லை. 

உறவுமுறை குறித்து பெரியார் எழுதிய கட்டுரை அறிவியல் பூர்வமானது அது ஒழுங்கீனத்தை கற்பிப்பது அல்ல. இந்து மதம் சில உறவு முறைகளின் மீது புனிதத்தை ஏற்றி வைத்திருக்கிறது. அந்தப் புனிதம் அற்புதமானது என்பதை அம்பலப்படுத்துவதற்காக தான் பேசியிருக்கிறாரே தவிர, யாரும் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்ற பொருளில் பெரியார் பேசவில்லை.‌ அது அவருக்கு எதிரான அவதூறு என்பதை விட தமிழ்நாடு மக்கள் போற்றும் அரசியலுக்கு கருத்துகளுக்கு எதிரானது. 

அம்பேத்கரும் பெரியாரும் ஒருவரை ஒருவர் போற்றி நட்பு பாராட்டிய தலைவர்கள். தான் மதம் மாற விரும்பவில்லை ஆனால் உங்கள் நிலைப்பாட்டை மதிக்கிறேன் என்று கூறியவர். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அம்பேத்கர் எடுக்க முடிவுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியவர் பெரியார். 

ஆனால் பெரியாரை அம்பேத்கரோடு ஒப்பிடக்கூடாது என்று சொல்லி பெரியாரை அவமதிப்பது ஏற்புடையதல்ல. அம்பேத்கரை இதற்கு துணைக்கு அழைப்பது தவறான அணுகுமுறை. மேதகு பிரபாகரனின் துணைக்கு அழைத்து கொள்கிறார். பிரபாகரன் எந்த இடத்திலும் திராவிட அரசியலுக்கு எதிராகவோ கருத்து சொன்னதில்லை.‌ அப்படிப் பேசுவது தான் தமிழ் தேசியம் என்று பிரபாகரன் எங்கும் சொன்னதில்லை. 

தன்னுடைய நிலைப்பாட்டுக்கு பிரபாகரனை துணைக்கழைப்பது கவலை அளிக்கிறது. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரே அவருக்கு எதிரான அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அது அவருக்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow