என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.

Jan 11, 2025 - 12:30
Jan 11, 2025 - 12:33
 0
என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!
என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

ஈரோடு தலைமை இடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 26 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமலிங்கம் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் நடத்தி வருகிறார்.

பூந்தமல்லி அடுத்த சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஜெ.டி.மெட்டல்ஸ் நிறுவனம், தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள எஸ்பிஎல் இன்புராஸ் எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் திருவொற்றியூர் மற்றும் சாத்தாங்காடு காவல் நிலை உட்பட்ட இரண்டு இடங்கள் என சென்னையை உட்பட ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் மற்ற இடங்களில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ரகசிய தகவலின் அடிப்படையில் கிடைத்த ஆவணங்களை கொண்டு சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முக்கிய ஆவணங்களை தேடி வருவதாகவும் அதற்காக ஐந்து நாட்களாக சோதனைகள் இரவு பகல் பாராது நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களும் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow