சிறையிலிருந்து வந்தால் தியாகியாம்... இதுல ஓடி ஓடி செல்பி வேற.... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Senthil Balaji : "பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா?" என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 27, 2024 - 15:34
Sep 27, 2024 - 15:49
 0
சிறையிலிருந்து வந்தால் தியாகியாம்... இதுல ஓடி ஓடி செல்பி வேற.... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
சிறையிலிருந்து வந்தால் தியாகியாம்... இதுல ஓடி ஓடி செல்பி வேற.... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

Senthil Balaji : சி.பா ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அவரது திருவுருவ படத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திராவில் லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு, “லட்டு விவகாரம் நம் அனைவர் மனதையும் புண்படுத்தும்படி இருக்கும் போது அதை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டது தவறு என்பதை சுட்டிக் காட்டதான் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வீடியோவை நீக்கிவிட்டாலும் புண்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புகார் கொடுத்தோம். என்னை பொறுத்தவரை பவண் கல்யானாக இருக்கட்டும், ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கட்டும், உணர்வு பூர்வமாக ஒரு தவறு நடந்தது என்றால் அந்தத் தவறை சுட்டிக்காட்டுவதற்கு அவர்கள் கடுமையான முயற்சி மேற்கொள்கிறார்கள். ஒரு நம்பிக்கையை யாரும் அவமரியாதை செய்யக்கூடாது. 

பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், மாநில பிரச்சனையை பெரிதாக்குவதாக சொல்கிறார்கள். திருப்பதி தேவஸ்தானத்திற்கு உலகம் முழுவதிலுமே பக்தர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா, கனடாவில் இருப்பவர்கள் இங்கிருக்கும் லட்டுக்காகக் காத்திருக்கிறார்கள். இது உலகம் முழுவதும் இருக்கும் பிரச்சனை. அந்த நம்பிக்கை உடையவர்களின் பிரச்சனை. இதை மாநில பிரச்சினையாக சுருக்கி விட முடியாது. தமிழகத்தில் இந்த நம்பிக்கை உடையவர்களை இடர்வதும் சரியானதல்ல. தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பண்டிகை வாழ்த்துகள் சொல்வதில்லை. ஆனால் ஆந்திராவில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள். தனக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த நம்பிக்கை சார்ந்தவர்களாக இருந்தால் மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்கிறேன் என்பதற்காகத்தான் பவன் கல்யாண் போன்றவர்கள் விரதமிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஊழல் செய்து விட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தால் தியாகிகளாக மாறி விடுகிறார்கள். இன்று காலை அவருடன் செல்பி எடுக்கிறார்களாம். இதை எங்கே போய் சொல்வது? ஜாமீன் தான் கிடைத்திருக்கிறது. விடுதலை ஆனது போல் கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா? இதை தெரிந்து கொண்டே முதலமைச்சரும் , தான் போட்ட வழக்கை தானே பலமுறை குற்றம் சாட்டியவர் என்று இல்லாமல், அவரை தியாகி போல் முன்னிறுத்துவது மிக வேடிக்கையான ஒன்று. 

இன்று பிரதமரை முதலமைச்சர் சந்தித்திருக்கிறார். பிரதமர் பரந்த மனப்பான்மை உடையவர். தமிழக மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அதை செய்வார். உதாரணமாக,  இலவச கோதுமை தமிழகத்திற்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூ. 7000 கோடி நிதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு தொடுக்கப்பட்டது. 2nd phase மெட்ரோ பற்றி பேசுகிறார்கள். மெட்ரோவை மாநில அரசே நடத்துகிறோம் என்று எடுத்துவிட்டு இந்த கையாளாகாத தனத்தை காண்பிக்கிறார்கள். ஆனால் அதிகப்படியான வந்தே பாரத் கொடுத்தது தமிழகத்திற்கு தான். 

மேலும் படிக்க: கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

இதே முதலமைச்சர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று நிதியை கேட்டிருக்கலாமே? ஆய்வு கூட்டத்திற்கு போக மாட்டேன் என்று இருந்துவிட்டு இன்று பிரதமரை சந்திக்கிறார். வெளிநாடு போவதற்கு முன் முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்க வேண்டும். தமிழகத்தை சார்ந்தவர்கள், ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow