அரசியல்

O. Panneerselvam : அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி!

O Panneerselvam Press Meet in Chennai : "அஇஅதிமுக(AIADMK) ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்; ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

O. Panneerselvam : அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி!
அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

O Panneerselvam Press Meet in Chennai : சிபா ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ் தந்தை சிபா ஆதித்தனார் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புகழுக்கு பெயர் சேர்க்கின்ற வகையில் அதிமுக தொண்டன் உரிமை மீட்பு குழு சார்பாக புகழஞ்சலி செலுத்தி இருக்கிறோம். பத்திரிக்கை உலகில் பாமர மக்களில் இருந்து  அடித்தட்டு மக்கள் வரை தமிழை சுலபமாக தமிழில் படிக்க அவர் ஆற்றிய பணி இன்றும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பாமர மக்களால் பாராட்டப்படுகிறது.  அவர் புகழ் உலகம் உள்ள  வரை நிலைத்து நிற்கும்” என்றார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தவிர வேற ஏதாவது இருந்தால் என்னிடம் கேளுங்கள் என செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கனவே நான் சொன்னது போல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்து இருக்கக்கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள். ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று வாங்கி ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது. 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. பிற நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.  

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் இருக்கக்கூடியதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பதுதான். தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்ஜிஆர், அம்மா கட்டிக் காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க: சிறையிலிருந்து வந்தால் தியாகியாம்... இதுல ஓடி ஓடி செல்பி வேற.... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

மேலும், “ராமநாதபுரத் தொகுதியில் போட்டியிட்டபோது  என்னை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஆறு பன்னீர்செல்வம் என்னுடன் நின்றார்கள் என்ன நடந்தது? இரட்டை இலையை டெபாசிட் இழக்கச் செய்து தமிழகத்தில் அருவருத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் திமுக. இந்தியாவில் ஒரு சுயேச்சை வெற்றி பெறுகிறார். இன்னொரு சுயேச்சை ஆகிய நான்  33 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறேன் என்பது தொண்டர்களும், பொதுமக்களும் எங்கள் பக்கத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.