பெண்கள் பாதுகாப்பு.. பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS Alarm வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி..!
அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS Alarm கருவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் sos alarm கருவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. முன்னதாக கட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.. எடப்பாடி பழனிச்சாமி, பெண்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் மற்றும் கரும்பு வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பாதுகாப்புக்காக சில உபகரணங்கள் வைத்து கொள்ள அறிவுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், அதிமுக சார்பில், பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் sos alarm கருவி அடங்கிய kit ஐ எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
அதில், இனி ஸ்டாலின் மாடல் ஆட்சியை நம்பி எந்த பயனும் இல்லை எனவும், அன்பு சகோதரிகளே உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு... எனவே பெப்பர் ஸ்பிரே மற்றும் sos alarm அடங்கிய இந்த பாதுகாப்பு உபகரணங்களை உங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசவை கண்டித்து அறிக்கை கொடுத்த எடப்பாடி பழனிசாமி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பெப்பர் ஸ்பிரே மற்றும் sos alarm பாதுகாப்பு கருவிகளை கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதாவையும், தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவையும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?