தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

கட்டிட அனுமதிக்கு  தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 31, 2024 - 12:13
Dec 31, 2024 - 12:15
 0
தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த  சென்னை உயர்நீதிமன்றம்..!
தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்

கட்டிட அனுமதிக்கு  தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுக்குமாடி கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசுக்கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன் தீயணையப்பு துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டியாமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டிடங்கள் அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அரசின் இரு குழுக்கள் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, தீயணையணைப்பு துறை தடையில்லா  சான்று வழங்குவதற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசானையை ரத்து செய்யக் கோரி சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற  தீயணைப்புத் துறை அதிகாரி எம்.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தீயணைப்பு துறை வழங்கி வரும் தடையில்லா சான்றை தனியார் மூலம் வழங்கலாம் என்பது சட்டவிரோதமானது என்றும் தீயணைப்பு துறை தான் அவ்வப்போது ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தனியார் மூலம் வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று புதிய நடைமுறைகளின் படி 3 ஆண்டுகளுக்கு செல்லும் என்பது மிகவும் ஆபத்தானது எனவும் இது ஊழலுக்கு வழிவகுக்கும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன், லட்சுமி நாராயணன் அமர்வு, இந்த அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும்   மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow