இளையராஜா பயோபிக் கைவிட்ட கமல்ஹாசன்! தனுஷின் இறுதி முடிவு?
இளையராஜாவின் பயோபிக் ட்ராப் ஆகிவிட்டதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னணி பற்றியும், தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் இசை ஆதிக்கம் எப்பேற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் இசைப் பயணம், இப்போது இமயம் போல உயர்ந்து நிற்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிம்பொனி உட்பட பல புதிய முயற்சிகளையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இளையராஜாவின் பயோபிக் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது இளையராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இந்தப் படத்தில், தனுஷுடன் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கேமியோவாக நடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. முக்கியமாக இளையராஜா பயோபிக் மூவியின் திரைக்கதையை, கமல்ஹாசன் எழுதவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருந்தது. ஆனாலும் இப்போது வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை, அதுபற்றி எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இளையராஜா பயோபிக் படத்திற்கு, தன்னால் திரைக்கதை எழுத முடியாது என கமல்ஹாசன் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. திரைக்கதை ரெடியாகாமல் ஷூட்டிங் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேபோல், தனுஷும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட்டும் பிரச்சினையாக உள்ளது. இளையராஜா பயோபிக் மூவியை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ், மெர்குரி மூவீஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்தன. ஆனால், இந்தப் படம் வெளியான பின்னர், அதன் வசூலில் தனக்கும் பங்கு வேண்டும் என இளையராஜா கேட்டதாகத் தெரிகிறது. இந்த பஞ்சாயத்தால், இளையராஜா பயோபிக் படத்தில் இருந்து கனெக்ட் மீடியா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இப்படி ஏகப்பட்ட குழப்பத்தில் திணறி வந்த இளையராஜா பயோபிக், மொத்தமாக சோலி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக, இந்தப் படத்தை, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனமும் தயாரிக்க பிளான் செய்து வருகிறதாம். தனுஷும் இதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இளையராஜா பயோபிக் மீண்டும் உருவாகும் சூழல் காணப்படுகிறது. ஆனாலும், இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது, படகுழுவுக்கே வெளிச்சம்.
What's Your Reaction?






