Diwali 2024: நெருங்கும் தீபாவளி.. சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Oct 29, 2024 - 13:09
 0

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா, கள்ளக்குறிச்சி-II ஆகிய இரு  கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,775 தொழிலாளர்களும் பணியாளர்களும் போனஸ் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow