மீனவர்கள் 5 பேர் கைது... சிங்களப் படையினர் அட்டகாசம்... மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி!

Fishermen Arrest in Kanyakumari : கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 23, 2024 - 12:58
Sep 23, 2024 - 15:49
 0
மீனவர்கள் 5 பேர் கைது... சிங்களப் படையினர் அட்டகாசம்... மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி!
மீனவர்கள் கைது - ராமதாஸ் கண்டனம்

Fishermen Arrest in Kanyakumari : கன்னியாகுமரியில் இருந்து ஆந்திராவுக்கு கடல் மார்க்கமாக சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், கன்னியாகுமரியில் படகு ஒன்றை விலைக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதே படகில் அவர்கள் கடல் மார்க்கமாக விசாகப்பட்டினம் திரும்பிச் சென்றுள்ளனர். அப்போது நெடுந்தீவு அருகே அவர்கள் சென்ற படகு பழுதாகி நின்ற நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். 

மேலும் பழுதாகி நின்ற படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், கைதான மீனவர்களை ஊர்க்காவல் துறைமுகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய, மாநில அரசுகளுக்கும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், வங்கக் கடலில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்ற விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகு கோளாறால் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒருபோதும் இந்திய - இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க மாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் தங்களின் படகில் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆந்திர மீனவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும் வழியில் நெடுந்தீவு அருகில் அவர்களின் படகு பழுதடைந்தது. அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது தான், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றி உதவி செய்வது தான் கடற்படைகளின் வழக்கமாகும். ஆனால், தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அணுகும் சிங்களப் படை மீனவர்களை கைது செய்துள்ளது. மீனவர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டது தவறு.

இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதை, இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போராகக் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் அலட்சியம் காட்டக் கூடாது. இந்த சிக்கலில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow