அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது - மாவட்ட தேர்தல் அதிகாரி
அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்பதால் ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்பதால் ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 1950 எண் மூலம் வாக்காளர்கள் புகார் குறித்து தொடர்பு தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் சோதனை பணிக்காக தலா மூன்றுபறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் தலா ஒரு வீடியோ மற்றும் தனிக்கை குழு ஆகிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த குழுவினர் 8 மணி நேரம் பணி சுழற்சி அடிப்படையில் சோதனை பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் தேர்தல் நடத்தைகள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்றார்,
50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்திய மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா , சுவர் , விளம்பரம் , கொடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்றும் அரசு இடங்களில் 24மணி நேரமும் , பொது இடங்களில் 48 மணி நேரமும், தனியார் இடங்களில் 72மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் விதிமுறில்கள் குறித்து சியூஜி செயலி மூலம் சம்பவம் இடம் உட்பட வாக்காளர்கள் புகார் அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்வதற்கு முன்பு முன் தணிக்கை சான்று பெறுவது அவசியம் என்ற மாவட்ட தேர்தல் அதிகாரி , பொங்கல் உள்ளிட்ட அரசு விடுமுறையில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்றும் இதனால் வேட்பாளர்கள் வரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 10 , 13 , 17ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்றார்
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பட்டியில் அடைத்து வைப்பது போன்ற புகார் வந்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு பணிக்காக மத்திய ராணுவப்படை வேண்டும் என கேட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்...
What's Your Reaction?