K U M U D A M   N E W S
Promotional Banner

சினிமா

AK-64: அஜித் மேலாளர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மக்கு.. பல செலிபிரிட்டிகள் எஸ்கேப்: பின்னணி பாடகி சுசித்ரா!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘சிக்கிடு வைப்..’ கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘குபேரா’ படத்தின் வசூல் நிலவரம்.. எவ்வளவு தெரியுமா?

தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வயதான பெண்மணி கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.. DNA திரைப்படம் குறித்து அதர்வா நெகிழ்ச்சி!

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிய 'DNA' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைப்பெற்றது.

NYIFF 2025: 'அங்கம்மாள்' படத்திற்கு சிறந்த திரைப்பட விருது!

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழா (NYIFF-New York Indian Film Festival) 2025, வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு திரையிடப்பட்ட திரைப்படங்களின் அடிப்படையில் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'அங்கம்மாள்' என்கிற தமிழ் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளது.

வாழா என் வாழ்வே வாழவே: 100 வது படம்.. கார்த்திக் நேத்தாவின் அன்பு மடல்!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் போதைப்பொருள் பல நாட்களாக உள்ளது - விஜய் ஆண்டனி

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல, பல நாட்களாகவே பயன்படுத்தப்படுவதாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்

"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.

திரைப்படம் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்: கண்ணப்பா பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.

Thug Life: நாயகன் படம் மாதிரி நினைச்சு வந்தாங்க.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணிரத்னம்!

ஜூன் 5 ஆம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் ஃலைப் திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் படுத்தோல்வி அடைந்துள்ள நிலையில், மணிரத்னம் வெளிப்படையாக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

“குட் டே” திரைப்படத்தின் ஒன்லைன் கதை இவர் வாழ்வில் நடந்ததா?

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வில் நடந்த விஷயங்களை மையமாக கொண்டு ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ளது “குட் டே” திரைப்படம். சமீபத்தில் நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.

'சைலோரே'.. ‘காதி’ படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியீடு..!

அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

'ஜன நாயகன்' தான் விஜய்யின் கடைசி படமா? மமிதா பைஜூ சுவாரஸ்ய தகவல்

இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

'த்ரிஷ்யம்'- 3.. வெளியான அசத்தலான அப்டேட்..!

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

'ரெட்ரோ' படம் ஒரு போரையே எதிர்கொண்டது.. கார்த்திக் சுப்பராஜ்

'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

THE FIRST ROAR: 'ஜன நாயகன்' படத்தின் அசத்தலான அப்டேட்..!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இன்னொரு நேஷனல் அவார்ட் பார்சல்.. தனுஷின் ’குபேரா’ திரைப்படம் எப்படி இருக்கு?

தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.

Aaromaley: 6 கட்டையில் பாடத் தெரியுமா? டி.ஆர்-யிடம் சவாலா?

சமீபத்தில் படத்தின் டைட்டில் குறித்த ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிய ’ஆரோமலே' படக்குழு, படத்தின் அடுத்த அப்டேட்டாக முதல் பாடல் டிராக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதுவும் பயங்கர மஜாவான ப்ரோமோவுடன்.

வெளிநாட்டு விற்பனை.. ரெக்கார்ட் படைத்த ரஜினியின் கூலி..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டுக்கான உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேமரா இப்போது என் நண்பன்: மகா கும்பமேளாவின் வைரல் பெண் மோனாலிசா!

16 வயதான மோனாலிசா தனது முதல் இசை வீடியோவான “Saadgi" -யினை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். போபாலில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ’கேமரா இப்போது என் நண்பன்’ என மனம் திறந்துள்ளார்.

நெல் ஜெயராமன் மறைவின் போது தந்த வாக்குறுதி.. சொன்ன சொல் மாறாத SK!

”நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார்” என மனம் நெகிழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

மெட்ராஸ் மேட்னி: கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும்.. காளி வெங்கட் நெகிழ்ச்சி!

’மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் கதையினை கேட்டபோது என் தந்தையின் ஞாபகம் வந்தது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என சென்னையில் நடைப்பெற்ற 'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவில் காளி வெங்கட் பேசியுள்ளார்.