டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2023ஆம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஷாருக்கான், ராணி முகர்ஜி, விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் தங்கள் முதல் தேசிய விருதுகளைப் பெற்றனர்.
ஷாருக்கானுக்கு தேசிய விருது
ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி இருவரும் சிறந்த நடிகருக்கான விருதை 'ஜவான்' மற்றும் '12th Fail' படங்களுக்காக பகிர்ந்து கொண்டனர். ராணி முகர்ஜி, 'Mrs. Chatterjee vs Norway' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
ஷாருக்கான் கருப்பு நிற பந்த்கலா உடையில், கருப்பு கண்ணாடியும், காதில் கம்மலும் அணிந்து தனது தனித்துவமான தோற்றத்துடன் விழாவில் பங்கேற்றார். மூன்று தசாப்த கால திரைப்பட வாழ்க்கையில், 'ஜவான்' படத்திற்காக ஷாருக்கான் தனது முதல் தேசிய விருதை வென்றார். 'ஜவான்' படம் உலகம் முழுவதும் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றார்.
தாதாசாகேப் பால்கே விருது
"தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இந்த பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் இது சொந்தமானது. என் குடும்பம், ரசிகர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள், மற்றும் நல விரும்பிகள், உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலம். இதுதான் இன்றைய என் வாழ்க்கையை வடிவமைத்தது. இந்த அங்கீகாரத்தை மிகுந்த நன்றியுடனும், முழு மனதுடனும் பெற்றுக்கொள்கிறேன்," என்று மோகன்லால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது
'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை தென்னிந்திய இயக்குனர் அட்லீ இயக்கி, அதில் ஷாருக்கான் ராணுவ அதிகாரி விக்ரம் ரத்தோர் மற்றும் அவரது மகன் ஆசாத் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
ராணி முகர்ஜி, 'Mrs Chatterjee vs Norway' படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். இது அவரது திரை வாழ்க்கையில் முதல் தேசிய விருது. "Mrs Chatterjee vs Norway' படத்திற்காக தேசிய விருது வென்றது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருது எனது 30 ஆண்டுகால கலைப் பணிக்கான அங்கீகாரம். எனது கலை மீது எனக்கு ஆழமான ஆன்மிக தொடர்பு உள்ளது. இந்த விருதை நான் சினிமாவிற்கும் இந்த அழகான திரைப்படத்துறைக்கும் அர்ப்பணிக்கிறேன்," என்று ராணி முகர்ஜி கூறினார்.இதேபோல், விக்ராந்த் மாஸ்ஸி தனது முதல் தேசிய விருதை ஷாருக்கானுடன் பகிர்ந்து கொள்வது ஒரு கனவு நனவான தருணம் என்று கூறினார்.
விருது வென்றவர்கள்:
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: 'Rocky Aur Rani Kii Kahaani' (இயக்குனர்: கரண் ஜோஹர்), தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்: 'Sam Bahadur' (இயக்குனர்: மேக்னா குல்சார்) , சிறந்த நடன அமைப்பு: வைபவி மெர்ச்சன்ட் ('Rocky Aur Rani Kii Kahaani' - 'Dhindhora Baaje'), சிறந்த பெண் பின்னணிப் பாடகி: ஷில்பா ராவ் ('Jawan' - 'Chaleya'), சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் ('The Kerala Story') , சிறந்த ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் & ஹரிஹரன் முரளிதரன் ('Animal'), சிறந்த ஒளிப்பதிவு: 'The Kerala Story',
சிறந்த இந்தி திரைப்படம்: 'Kathal: A Jackfruit Mystery', சிறப்பு விருது: எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ('Animal')
‘பார்க்கிங்’ திரைப்படம்
பார்க்கிங் படத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். இதேபோல் சிறந்த தமிழ்த் திரைப்படமாக பார்க்கிங்கிற்கு தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் விருது வாங்கினார். மேலும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றார்.
வாத்தி திரைப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். இதேபோல் 'உள்ளொழுக்கு' படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய ஊர்வசி பெற்றார். சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை பூக்காலம் பட எடிட்டர் மிதுன் முரளி பெற்றார். இதேபோல் தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார். தமிழில் பார்க்கிங் திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளது.