தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (செப். 27) கரூரில் நடத்திய மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்துக்குப் பல திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் தனது 'எக்ஸ்' பக்கத்தில் உணர்ச்சிகரமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
கரூர் நெரிசலில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தைப் பதிவு செய்துள்ளது.
பார்த்திபனின் உருக்கமான பதிவு
நடிகர் பார்த்திபன் இந்தச் சம்பவம் குறித்துப் பதிவிட்டிருப்பதாவது:
"'கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின் 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி, (இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி 'கொடுத்து வைத்தவர்கள்'."
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்" என்று அவர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
திரைப் பிரபலங்கள் இரங்கல்
கரூரில் நடந்த இந்தத் துயர சம்பவத்துக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஜி.வி. பிரகாஷ், சூரி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.