சினிமா

நடிகர் ரவி மோகனுக்கு வங்கி நோட்டீஸ்.. ரூ.7.64 கோடி கடன் பாக்கி!

வங்கியில் தவணை தொகையை சரியாக செலுத்தாத காரணத்தால் ரவி மோகன் வீடு மற்றும் அலுவலகத்தில் வங்கி சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் ரவி மோகனுக்கு வங்கி நோட்டீஸ்.. ரூ.7.64 கோடி கடன் பாக்கி!
Bank Issues Notice to Actor Ravi Mohan
கடந்த 10 மாதங்களாக இ.எம்.ஐ. தொகையைச் செலுத்தாததால், நடிகர் ரவி மோகன் வீடு மற்றும் அலுவலகத்தில் வங்கி சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தவணை பாக்கி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டை வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடந்த 10 மாதங்களாக அந்த வீட்டிற்கான தவணைத் தொகையை அவர் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. வங்கியின் தரப்பில், ரவி மோகன் ரூ.7.64 கோடி வரை கடனை பாக்கி வைத்துள்ளதாகவும், நோட்டீஸ் அனுப்பியும் முறையான பதில் இல்லை என்றும் தெரிகிறது.

வங்கி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

இந்த நிலையில், வங்கி சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரவி மோகன் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள அவரது ஸ்டூடியோ அலுவலகம் ஆகியவற்றில், கடனைச் செலுத்தக் கோரும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடனைச் செலுத்தத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஸ்டூடியோ அலுவலகத்தின் கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை, அலுவலக ஊழியர்கள் உடனடியாகக் கிழித்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் ரவி மோகன் தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.