சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு சிறப்பு டி-ஷர்ட், 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்க வாய்ப்பு எனப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘தி யு1னிவர்ஸ் டூர்’ என்ற உலக இசை நிகழ்ச்சி, வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்க இருக்கிறது. சென்னை YMCA மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. யுவனின் இசையைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிக்கு KYN நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவன் கையொப்பமிட்ட சிறப்பு டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவன் சங்கர் ராஜாவுடன் புகைப்படம் எடுக்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் இசையின் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை KYN செயலி மூலம் பதிவு செய்யலாம். யுவனின் உணர்வுப்பூர்வமான பாடல்களை நேரில் கேட்டு ரசித்து, இந்த மாபெரும் இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக மாறும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிட வேண்டாம் என படக்குழு தெரிவித்துள்ளது.