தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "என்னை கலைமாமணியாகத் தேர்ந்தெடுத்த தமிழக அரசு, இயல், இசை, நாடக மன்றம், இதுவரை துணை நின்ற அனைத்துத் திரைத்துறை நண்பர்கள், ஊடக நண்பர்கள், என் அன்பான ரசிகர்கள், இந்த விருதை எனக்கு வழங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கோடான கோடி நன்றி" என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருது பெறுவோர்
தமிழக அரசின் சார்பில் 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.