சினிமா

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!
தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை, அக்டோபர் 1, 2025 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பக்கா ஃபேமிலி சென்டிமென்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு (ப்ரீ புக்கிங்) தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெளியீட்டை ஒட்டி, 'இட்லி கடை' படக்குழு தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தனுஷின் 4-வது இயக்கம்

நடிகராகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் தனுஷ், தனது 52-வது படமான 'இட்லி கடை'யை தானே இயக்கி நடித்துள்ளார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் 4-வது படம் ஆகும். இதற்கு முன்னர், தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று, அவரை 'இயக்குநர் தனுஷ்' என்றும் அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையை நிரூபித்து வரும் தனுஷின் இந்தப் புதிய படைப்பு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இட்லி கடை' படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷின் தந்தையாக நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய், 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு ஒரு சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் இதில் நடித்துள்ளதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தலைவன் தலைவி' படமும் ஹோட்டலை மையப்படுத்திய கதைக்களத்தைக் கொண்டிருந்த நிலையில், 'இட்லி கடை' படமும் அதேபோல் ஹோட்டலை மையமாக வைத்தே உருவாகியுள்ளது. இவர்களுடன் நடிகர்கள் ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரகனி மற்றும் பார்த்திபன் ஆகியோரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியுடன் உருவாகியுள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை திரையரங்குகளை ஆக்கிரமிக்கத் தயாராக உள்ளது.