சினிமா

Viral Video: வாளை சுழற்றிய பவன் கல்யாண்.. நூலிழையில் உயிர் தப்பிய பாதுகாவலர்!

பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து, அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video: வாளை சுழற்றிய பவன் கல்யாண்.. நூலிழையில் உயிர் தப்பிய பாதுகாவலர்!
Pawan Kalyan's bodyguard narrowly escapes death
தான் நடித்துள்ள 'தே கால் ஹிம் ஓஜி' திரைப்படத்தின் வெளியீட்டு விழா மேடையில் நடிகர் மற்றும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் வாளை சுழற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தியபோது, அது அவரது பாதுகாவலர் மீது உரசிச் செல்ல இருந்த பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் நடந்தது என்ன?

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 'ஓஜி' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று (செப்.22) நடைபெற்றது. இந்த விழாவில், பவன் கல்யாண் தனது பட கதாபாத்திரமான ஓஜாஸ் கம்பீரா தோற்றத்தில், பெரிய வாளுடன் மேடைக்கு வந்தார். அப்போது, கையில் இருந்த வாளை அவர் சுழற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, வாள் அவரது அருகில் நின்றிருந்த பாதுகாவலர் ஒருவரின் மீது உரசிச் செல்ல இருந்தபோது, அவர் நூலிழையில் உயிர் தப்பினார். அந்த பாதுகாவலர் சுதாரித்துக்கொண்டதால் அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் கண்டனம்

பவன் கல்யாணின் இந்தச் செயலைக் கண்ட பலரும், பொறுப்பற்ற செயல் எனக் கூறி, சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். ஆந்திராவின் துணை முதலமைச்சராக உள்ள ஒருவர், பொது நிகழ்ச்சியில் இவ்வாறு ஆபத்தான முறையில் நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது எனப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.