நடிகர் ரஜினிகாந்த், கோயம்புத்தூரில் நடைபெற்ற ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், படத்தின் வெளியீட்டுத் தேதி உட்பட பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு
கோயம்புத்தூரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த 'ஜெயிலர்-2' படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. படப்பிடிப்பு குறித்துப் பேசிய ரஜினிகாந்த், "படப்பிடிப்பு மிக நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகிப் பால்கே விருது கிடைத்தமைக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர்-2 திரைப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தப் படத்தின் முதல் பாகம், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.