தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, நடிகர் விக்ரம் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "2022 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்திற்காக அரசிற்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது. சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது, நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன்" என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
விருது பெறுவோர்
தமிழக அரசின் சார்பில் 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் கடந்த 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல கலைஞர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.