சினிமா

விசாகப்பட்டினம் To சென்னை.. விஜய்யை சந்திக்க ஆந்திர ரசிகர் நடைபயணம்!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

விசாகப்பட்டினம் To சென்னை.. விஜய்யை சந்திக்க ஆந்திர ரசிகர் நடைபயணம்!
Andhra Pradesh fan is undertaking a walkathon to meet actor Vijay
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை நேரில் சந்திக்க ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

நடிகர் விஜய், தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சேகர் (32) என்ற தீவிர ரசிகர், விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக ஒரு தனித்துவமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

விசாகப்பட்டினத்திலிருந்து நடைபயணமாக புறப்பட்ட சேகர், தற்போது ராணிப்பேட்டை வழியாகச் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

"அடுத்த முதல்வர் விஜய் தான்"

செய்தியாளர்களிடம் பேசிய சேகர், “ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் எப்படியோ, அதேபோல் தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

கையில் விஜயின் புகைப்படம் அடங்கிய பேனரை ஏந்தியபடி சாலைகளில் செல்லும் இவருக்கு, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சென்னைக்குச் சென்று விஜயின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்பதே சேகரின் கனவாக உள்ளது.