'காந்தாரா'வின் பிரம்மாண்ட வெற்றி
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படமான 'காந்தாரா', கர்நாடகாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அதன் முந்தைய பாகமான 'காந்தாரா சாப்டர் 1' படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தை பல்வேறு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
பிரம்மாண்டமாக வெளியான ட்ரெய்லர்
இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். தமிழ் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இதேபோல், மலையாள ட்ரெய்லரை நடிகர் பிருத்விராஜும், தெலுங்கு ட்ரெய்லரை பிரபாஸும், இந்தி ட்ரெய்லரை ஹிருத்திக் ரோஷனும் வெளியிட்டனர்.
வரலாற்றை பேசும் கதை
ட்ரெய்லரில், ரிஷப் ஷெட்டியின் மகன், தனது தந்தை மாயம் ஆனதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், முதல் பாகமான 'காந்தாராவின்' பின்னணியில் உள்ள வரலாற்றை இந்தத் திரைப்படம் பேசும் என்று தெரிகிறது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடியான சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர்கள் இந்தப் படம் கண்டிப்பாக ₹1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A tale of folklore and faith, brought alive with fire & fury. Happy to unveil the Tamil Trailer of #KantaraChapter1 - a rooted spectacle for all cinema lovers.https://t.co/Xw7oWd6HPz
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 22, 2025
Best wishes to @shetty_rishab, @rukminitweets and @hombalefilms for a massive success 😊👍… pic.twitter.com/XiHaJrtV4k