சினிமா

‘96’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் - இயக்குநர் பிரேம்குமார்

'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

  ‘96’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் - இயக்குநர் பிரேம்குமார்
96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார்
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் '96'. பள்ளிப் பருவ காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தைவிட இது அற்புதமாக இருக்கும்

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் பிரேம் குமார், '96' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் எனது சினிமா பயணத்தில் பல கதைகளை எழுதியுள்ளேன்.ஆனால், இந்த '96' இரண்டாம் பாகத்தின் கதை, நான் எழுதியதிலேயே மிகச் சிறந்த கதை. முதல் பாகத்தைவிட இது மிகவும் அற்புதமாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு

'96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற செய்தி, ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா மீண்டும் ஜோடி சேர்வார்களா அல்லது புதிய நடிகர்கள் இதில் இணைவார்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.