சினிமா

71st National film award: 'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது!

'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.

71st National film award: 'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது!
Music composer G.V. Prakash wins National Award for the film Vaathi
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி. பிரகாஷ் குமார், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், 'வாத்தி' திரைப்படத்தின் பாடல்களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இரண்டாவது தேசிய விருது

100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இரண்டாவது தேசிய விருதை தற்போது பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 'சூரரைப் போற்று' படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றிருந்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்தவாறு மேடையில் தோன்றி, தனது விருதை அவர் பெற்றுக்கொண்டார்.

'வாத்தி' திரைப்படம்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய 'வாத்தி' திரைப்படம், 2023-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.