மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Dec 23, 2024 - 14:43
Dec 23, 2024 - 15:19
 0
மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!
மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, மண்ணடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர்.

இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா மட்டுமின்றி அதிக விலை கொண்ட மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருட்களும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, யாரையெல்லாம் தொடர்புகொண்டு கஞ்சா பொட்டலங்கள், மெத்தம்பெட்டமைன்கள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சப்ளை செய்தார்கள் என தனிப்படை போலீஸார் விசாரணை செய்தனர்.

இதற்கிடையே, காட்டாங்கொளததூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை தனிப்படை போலீஸார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரைக் கைது செய்து விசாரித்தனர். கேரளாவைச் சேர்ந்த அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இது தொடர்பான புகாரில், நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தையடுத்து  ஜெ.ஜெ.நகா் காவல்துறையினர் துக்ளக்கை கடந்த டிசம்பர் 4 ம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அம்பத்தூர் நீதிமன்றம், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து அலிகான் துக்ளக் ஜாமீன் வழங்க கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை  விசாரணைக்கு வர உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow