காரில் Fastag ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்.. புது ரூல்ஸ் இன்று முதல் அமல்.. முழு விபரம்

FASTag News Rules : உங்களுடைய பாஸ்டாக்கை வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டாமல் கையில் வைத்துக் கொண்டு டோல்கேட்டை கடக்க முயன்றால், ஃபாஸ்டாக் வைத்திருந்தாலும் நீங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

Jul 19, 2024 - 12:40
Jul 20, 2024 - 10:21
 0
காரில் Fastag ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்.. புது ரூல்ஸ் இன்று முதல் அமல்.. முழு விபரம்
FASTag News Rules

FASTag News Rules : வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் Fastag ஸ்டிக்கரை ஒட்டாத வாகன ஓட்டிகளுக்கு இரு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. உங்களுடைய பாஸ்டாக்கை வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டாமல் கையில் வைத்துக் கொண்டு டோல்கேட்டை கடக்க முயன்றால், ஃபாஸ்டாக் வைத்திருந்தாலும் நீங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கீழ் செயல்படும் NHMCL அமைப்பு ஃபாஸ்டாக் தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. எனவே உங்களுடைய வண்டியில் ஃபாஸ்டாக் இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய பாஸ்டாக்கை வாகனத்தின் கண்ணாடியில் பொறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு பொறுத்தாமல் கையில் ஃபாஸ்டாக் வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியைக் கடக்க முயன்றால், ஃபாஸ்டாக் வைத்திருந்தாலும் நீங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

எக்ஸ்பிரஸ்வே மற்றும் கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலைகளில் சில வாகன ஓட்டிகள் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஃபாஸ்டாக்கைப் பொறுத்தாமல் செலுத்துவதைத் தவிர்ப்பதால் NHMCL அமைப்பு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. சில கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக கண்ணாடியில் வைப்பதற்குப் பதிலாக பாக்கெட்டுகளில் சிலர் வைத்துக் கொண்டு செல்வதாகப் புகார்கள் வந்துள்ளன.

அலகாபாத் பைபாஸ், அமிர்தசரஸ்-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்வே மற்றும் வேறு சில கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற பல நிகழ்வுகளை NHAI கண்டறிந்துள்ளது, அங்கு மக்கள் டோல் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக கண்ணாடியில் வைப்பதற்குப் பதிலாக பாக்கெட்டை பாக்கெட்டுகளில் வைத்திருந்தனர்.

ஒரு வாகனம் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும்போது மட்டுமே அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் கழிக்கப்படும். உள்ளே நுழைவது முதல் வெளியேறும் வரை பயணிக்கும் கிலோமீட்டரின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் நுழைவுப் பாதையில் இருந்து ஃபாஸ்டாக் காட்டாமல் உள்ளே நுழைந்து பாக்கெட்டில் வைத்திருக்கும் ஃபாஸ்டாக்கைக் காட்டி பணம் செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர்.

இது தொடர்பாக NHMCL வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு வாகனம் ஃபாஸ்டாக் பாதையில் நுழைந்து அதன் கண்ணாடியில் ஃபாஸ்டாக் இல்லை என்றால் அங்குள்ள டோல் ஆபரேட்டர் அல்லது டோல் வசூல் நிறுவனங்கள் பயனர் கட்டணமாக இரு மடங்கு தொகையை வசூலிப்பார்கள். அபராதம் விதிப்பது உட்பட கட்டணம் வசூலிப்பவர்கள் இந்த தகவலை சுங்கச் சாவடியில் காட்சிப்படுத்த வேண்டும். கண்ணாடியில் ஃபாஸ்டாக் இல்லாத காரணத்துக்காகவே இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் முன்பக்க கண்ணாடியில் ஃபாஸ்டாக் பொருத்தப்பட்டிருந்தால் அந்தக் கார் சுங்கச் சாவடிகையை அடைந்தவுடன் அது ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க வரி அக்கவுண்டில் இருந்து கழிக்கப்படும். இதனால், பின்னால் நிற்கும் வாகனங்களும் காத்திருக்காமல், அவர்களும் எளிதாக முன்னோக்கிச் செல்ல முடிகிறது. கேமராவால் எளிதாக ஸ்கேன் செய்யக்கூடிய இடத்தில் ஃபாஸ்டாக் பொறுத்தப்பட வேண்டும். சிலர் ஸ்கேன் செய்ய முடியாத இடங்களில் ஃபாஸ்டாக்கைப் பொறுத்துவதால் சிரமம் ஏற்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow