DETOX ஜூஸ் குடிக்கிறீங்களா? போச்சு போங்க! பகீர் கிளப்பும் மருத்துவர்கள்..!
உடல் எடையை குறைக்கவோ, உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கவோ தற்போது பலரும் DETOX JUICE, சூப், என பல விஷயங்களை அருந்தி வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களிடையே தற்போது நிலவும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், நமது உடல்நிலையை நாமே பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், பலரும் காய்கறி, பழம், விதைகள், வேர்கள்னு இப்படி என்னென்னமோ வெச்சு ஒரு ஜூஸ் தயாரித்து அதை வழக்கமா குடித்து வருகின்றனர். இப்படி ஜூஸ் குடிக்குறது மூலமா நமது உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
இதுமட்டும் இல்லாமல், இந்த மாதிரி ஜூஸ்லாம் குடிக்குறது உடலுக்கு நல்லதுன்னும், இது இயற்கை முறையில் நம்ம உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேத்தும்னு பல யூடியூப் டாக்டர்கள் சொல்றாங்க. இப்படியான ஒரு ட்ரெண்ட் மக்கள் மத்தியில சென்று சேர்ந்ததுக்கு பிரபலங்களும் ஒரு காரணம்னு சொல்லலாம், என்னோட GLOWING SKINக்கு நான் காலையில எழுந்ததும் இதான் பண்றேன்னு ஒரு ஜூஸ்ஸ சொல்ல அதயும் வெகுஜன மக்கள் பின்பற்றுறாங்க. இதுனாலயே இப்போ இது ஒரு பேஷனாகிடுச்சு.
ஆனா உண்மையிலேயே இந்த டீடாக்ஸ் ஜூஸ் உடலுக்கு நல்லது தானா? பொதுவாவே ஒரு ஆரோக்கியமான உடல்ல இருக்க சிறுநீரகம், கல்லீரல், தோள், நுரையீரல் இது எல்லாமே இயற்கையாவே நச்சுக்கள வெளியேத்துற தன்மை கொண்டதுன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இப்படி இயற்கையா நடக்குற ஒரு செயல்முறைய டீடாக்ஸ் ஜூஸ்ன்ற பெயருல பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து குடிக்குறப்போ அது வேற விதமா திரும்பி, அந்த கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பாதிக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
இன்னும் சிலர் இது மாதிரியான ஜூஸ்கள உடல் எடை குறைக்குறதுக்காக குடிப்பாங்க. இப்படி டீடாக்ஸ் ஜூஸ் பருகுறதுனால உடல் எடை அந்த தருணத்துக்கு குறஞ்சாலும், அந்த ஜூஸ்ஸ குடிக்குறத நிறுத்துன அப்புறம் உங்க உடல் எடை இரண்டு மடங்கா கூடுறதுக்கான வாய்ப்பும் அதிகமா இருக்குறதா மருத்துவர்கள் எச்சரிக்கிறாங்க. இன்னும் சிலர் இந்த மாதிரியான டீடாக்ஸ் ஜூஸ் எல்லாம், நம்ம உடலுக்கு தேவையான சத்துக்கள கொடுக்கும்னு சொல்லி தினசரியா அத பருகுவாங்க. ஆனா, அப்படி சில காய்களையும், பழங்களையும் அதிகமா எடுக்குறதே சில பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும்னும், சரியான ஆரோக்கியத்துக்கு புரதச் சத்து, நார் சத்து போன்ற எல்லா சத்துக்களும் சரிசமமா வேண்ணும்னும் மருத்துவர்கள் சொல்றாங்க.
இதனால, ஆரோக்கியமா இருக்க இப்படி டீடாக்ஸ் ஜூஸ்லாம் எடுத்துக்காம, சரியான நேரத்துக்கு சரியான சத்துள்ள உணவுகள சாப்பிட்டு, 8 மணி நேரம் தூங்கி, நிறைய தண்ணீர் குடிச்சு, கொஞ்சம் உடற்பயிற்சியும் செஞ்சாலே போதும்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
What's Your Reaction?