Bigg Boss Tamil Season 8 Contestant : குக்கு வித் கோமாளி.. பிக் பாஸ் 8 வீட்டிற்குள் நுழையும் விடிவி கணேஷ்.. ரகளை கன்பார்ம்

Bigg Boss Tamil Season 8 Contestant : குக்கு வித் கோமாளியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமான ‘விடிவி' கணேஷ் பிக் பாஸ் தமிழ் 8 சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 25, 2024 - 15:43
Sep 25, 2024 - 15:58
 0
Bigg Boss Tamil Season 8 Contestant : குக்கு வித் கோமாளி.. பிக் பாஸ் 8 வீட்டிற்குள் நுழையும் விடிவி கணேஷ்.. ரகளை கன்பார்ம்
Bigg Boss Tamil Season 8 Contestant List
Bigg Boss Tamil Season 8 Contestant : அக்டோபர் 6ஆம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்குகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கயிருக்கும் இந்த சீசனின் 22 போட்டியாளர்களையும் அலசி ஆராய்ந்து தேர்வு செய்துவருகிறது விஜய்  டிவி டீம். கடந்த சீசன்களில் பங்கேற்ற 3 சிறப்பான போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. 

இதற்கிடையே இந்த சீசன் குக்கு வித் கோமாளியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமான ‘விடிவி' கணேஷ் பிக் பாஸ் தமிழ் 8 சீசனிலும் பங்கேற்கிறார். சீனியர் கோட்டாவில் டிக் அடிக்கப்பட்டிருக்கும் விடிவி கணேஷுக்கு ஒரு நாளுக்கு 50,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. 

ப்ரொடக்‌ஷன் மேனேஜராகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய விடிவி கணேஷ்(VTV Ganesh) அஜித் நடித்த ‘ரெட்’ படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் கூட்டாளியாகவும் பயணித்த கணேஷை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கெளதம் மேனன் நடிக்கவைக்க, அந்தப்படம்தான் கணேஷின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை ப்ரொடக்‌ஷன் கணேஷாக இருந்தவர் ‘விடிவி' கணேஷாக மாறினார்.

இந்த சீசன் ‘குக்கு வித் கோமாளி’க்கு தனது டிரேட்மார்க் நகைச்சுவை பேச்சுகள் மூலம் டிஆர்பி தந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் கணேஷின் காமெடி ப்ளஸ் அனுபவ அலசல்கள் பிக் பாஸுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கிறது விஜய் டிவி. 2017ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸின் முதல் சீசனிலேயே விடிவி கணேஷை போட்டியாளராக கலந்துகொள்ளச்சொல்லி விஜய் டிவி அணுகியது 7ஆண்டுகளுக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகிறார் விடிவி கணேஷ்(VTV Ganesh).

அதற்கு முன்னதாக விடிவி கணேஷ் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறாராம். மணிமேகலை விலகிய பிறகு இரண்டு வாரங்களுக்கான சூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று விஜய் டிவி தரப்பில் இருந்து புது போஸ்ட் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் இந்த ஐந்தாவது சீசனில் புதிய தொகுப்பாளர் யார் என்று கண்டுபிடிங்கள் பார்ப்போம்... அது உங்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம். நன்கு அறிமுகமானவர்களாக கூட இருக்கலாம் என்று க்ளூ கொடுத்திருந்தனர்.

ரக்சன் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். அவரோடு சேர்ந்து புகழ் மற்றும் விடிவி கணேஷ் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். ஏற்கனவே விடிவி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்திருந்தார். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் எலிமினேஷன் ஆகி இருந்தார். அவர் எலிமினேஷன் ஆன அன்று நடந்த சூட்டிங்கில் தான் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே பிரச்சனையை ஏற்பட்டது. இந்த நிலையில் இவர் இப்போது தொகுப்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த உடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகிறார் விடிவி கணேஷ்.பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் தீபக், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத், காமெடி நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ரஞ்சித், தொகுப்பாளர் ஜெகன், செல்லமா சீரியல் நடிகை அன்ஷிதா, நடிகை பவித்ரா ஜனனி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா, மகாராஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சஞ்சிதா, உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow