'இல்லத்தார்க்கு உகந்த படம்’ - மெய்யழகன் படத்திற்கு 'யு' சான்றிதழ்!
'இல்லத்தார்க்கு உகந்த தடையில்லா பொதுக்காட்சித் திரைப்படம்' என்று பதிவிட்டு மெய்யழகன் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மெய்யழகன் படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படமாக உருவாகியுள்ள மெய்யழகனுக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், மெய்யழகன் படத்தின் (Meiyazhagan Movie Trailer) ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின, அதில் கமல்ஹாசனும் ஒரு பாடல் பாடியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான மெய்யழகன் ட்ரெய்லரும் ரசிகர்களுக்கு எமோஷனல் டச் கொடுத்துள்ளது. தனது சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்த் சாமிக்கும், அங்கு வசித்து வரும் கார்த்திக்கும் இடையேயான ட்ராவல் தான் மெய்யழகன் படத்தின் கதை என்பதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.
96 பட ஸ்டைலில், மெய்யழகனும் கார்த்தி – அரவிந்த் சாமி என இருவருக்கும் இடையேயான உரையாடல், அவர்களின் இரவு நேர நகர்வலமாக உருவாகியுள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக மெய்யழகன்(Meiyazhagan) இருக்கும் என்பதையும் இந்த ட்ரெய்லர் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்து இயக்குநர் பிரேம்குமார், கார்த்தி ஆகியோர் பேசியிருந்தனர். இந்நிலையில், இப்போது வெளியான மெய்யழகன் ட்ரெய்லர், ரசிகர்களுக்கு ஒரு ஃபீல்குட் அனுபவத்தை கொடுத்துள்ளது.
இந்தப் படத்தில் “ஃபைட் வேணுமா ஃபைட் கிடையாது, லவ் வேணுமா லவ் கிடையாது, சாங் வேணுமா சாங் கிடையாது” என மெய்யழகன் இசை வெளியீட்டு(Meiyazhagan Movie Audio Launch) விழாவில் பேசியிருந்தார் கார்த்தி. அவர் சொன்னபடி மெய்யழகன் ட்ரெய்லர் அட்டகாசமாக வந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், இந்த மாதிரி ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, மனதை கரைத்த நொடிகளை கடந்து மெய்மறந்து இதயத்தை தொட்டுவிட்டது என்றும் இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் மெய்யழகன் ட்ரெய்லரில் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க: மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி திடீரென போலீசில் புகார்.. என்ன விஷயம்?
இந்நிலையில், மெய்யழகன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இல்லத்தார்க்கு உகந்த தடையில்லா பொதுக்காட்சித் திரைப்படம்' என்று பதிவிட்டு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
What's Your Reaction?