சினிமா

மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி திடீரென போலீசில் புகார்.. என்ன விஷயம்?

இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பேசும்பொருளாகி, ஜெயம் ரவி விவகாரத்துக்கு கொஞ்சம் ஓய்வளித்தது.

மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி திடீரென போலீசில் புகார்.. என்ன விஷயம்?
Actor Jayam Ravi

சென்னை: தமிழக திரையுலகில் பிரபலங்கள் விவகாரத்து செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் பிரபல நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்ய உள்ளதாக அறிவித்தது கடந்த சில நாட்களாக பேசும் பொருளாக உள்ளது. அதே வேளையில் ஜெயம் ரவி தன்னிடம் தெரிவிக்காமல் தன்னிச்சையாக விவகாரத்து முடிவு எடுத்து அறிவித்துள்ளதாக  ஆர்த்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி,  ’’விவகாரத்து முடிவு குறித்து ஆர்த்திக்கு தெரியும். இரண்டு முறை நோட்டீல் அனுப்பி, அவரிடம் கலந்து பேசி தான் இந்த முடிவு எடுத்தேன்’’ என்று கூறியிருந்தார். இதற்கிடையே பாடகி கெனிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் சமுகவலைத்தளத்தில் பலரும் கொழுத்திப் போட்டனர். 

இந்த தகவல்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ஜெயம் ரவி, ‘’ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயரையெல்லாம் சொல்லி ஏதேதோ செய்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா 600 மேடைகளில் பாடியவர், பல உயிர்களையும் காப்பாற்றியவர், அவர் ஒரு ஹீலர். வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.

அதனால் என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம். எங்களுடைய நோக்கம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான், அதை யாரும் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது’’என்று பேசியிருந்தார். இதற்காகவே காத்திருந்த சிலர், ’’ஜெயம் ரவிக்கு கெனிஷாவுடன் இந்த அளவுக்கு பழக்கம் இருக்கிறதா? இப்பதான் எல்லாம் தெரியுது’’ என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சமூகவலைத்தளத்தில் கொட்டித் தீர்த்தனர்.  

இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பேசும்பொருளாகி, ஜெயம் ரவி விவகாரத்துக்கு கொஞ்சம் ஓய்வளித்தது. இந்நிலையில், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மீது திடீரென போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அனு அளித்த ஜெயம் ரவி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது மனைவி ஆர்த்தி வீட்டில் இருந்து தன்னுடைய உடைமைகளை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.