Ajith: மீண்டும் கார் ரேஸுக்கு ரெடியான அஜித்... Ferrari-ல் டெரர் அவதாரம்... வைரலாகும் போட்டோஸ்!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித், மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது செம மாஸ்ஸான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Sep 27, 2024 - 18:16
 0
Ajith: மீண்டும் கார் ரேஸுக்கு ரெடியான அஜித்... Ferrari-ல் டெரர் அவதாரம்... வைரலாகும் போட்டோஸ்!
Ajith Kumar

துபாய்: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என, இரண்டும் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி-ஐ தொடர்ந்து அஜித்தின் அடுத்தப் படம் என்ன, இயக்குநர் யார் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இயக்குநர்கள் சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் ஆகியோர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அதற்கு முன்னதாக அஜித் வேறொரு முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அஜித் ஏற்கனவே பைக், கார் ரேஸ்களில் பங்கேற்று மாஸ் காட்டியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் தயாரிப்பது என அஜித் ஒரு கோலிவுட் சயின்டிஸ்ட்டாக வலம் வருகிறார். 

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்துவிட்டு, மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ளார் அஜித். கடந்த சில தினங்களாகவே துபாயில் முகாமிட்டு வரும் அஜித், அங்கு ரேஸ் கார் டிரைவிங் பிராக்டிஸ் செய்து வருகிறார். அதோடு பல கோடி மதிப்பிலான ஃபெராரி காரையும் சொந்தமாக வாங்கியுள்ளார். 2025ம் ஆண்டு ஐரோப்பாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தும் பங்கேற்கவுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் அப்டேட் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், Ferrari 488 EVO கார் ஓட்டும் அஜித்தின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ள அவர், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அஜித் ரெடியாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் புதிய ஹெல்மேட்களையும் இந்த டிவிட்டர் பதிவில் ஷேர் செய்துள்ளார் சுரேஷ் சந்திரா. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் விடாமுயற்சி அப்டேட்டை தவிர மற்ற எல்லா அப்டேட்களும் வருது, அஜித் தான் இதுக்கு ஒரு முடிவு கொடுக்கணும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow