விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்.. நடிகர் நட்ராஜ் கருத்து

நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்தியது வேதனை அளிப்பதாகவும், அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம் என்றும் நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

Dec 22, 2024 - 14:01
 0
விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்.. நடிகர் நட்ராஜ் கருத்து
நட்ராஜ்-விஜய்

தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளராக அறிமுகமான நட்டி (எ) நட்ராஜ் முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னர் ஒளிப்பதிவிலிருந்து விலகி நடிகராக வலம் வந்தார். தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கோவையில் நடைபெறும் சினிமா சூட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து இருந்த நடராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். காசு கொடுத்து படம் பார்க்கிறார்கள் அதில் உள்ள நிறைவுறைகளை அவர்கள் சொல்வார்கள். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். அதை நாம் அக்செப்ட் செய்து கொள்ள வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஓடிடி தளத்தில் என்ன பிரச்சனை இருக்கின்றது. அது பரிணாம வளர்ச்சி. நாம் தற்போது போனில் படம் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டோம், இன்னமும் விருச்சுவல் ரியாலிட்டியாக படம் பார்க்கும் அளவிற்கு வந்து விடுவோம். இது வளர்ந்து கொண்டே தான் இருக்கும் அந்த அளவிற்கு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஒரு காலத்தில் 50 லட்சம் ரூபாயில் படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். தற்பொழுது 120 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அதை எப்படி ரெக்கவர் செய்வார்கள். மல்டிபிளக்ஸ் என்பது வளர்ந்து கொண்டே தான் இருக்கும் அதை மாற்ற முடியாது. மக்களும் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் நல்ல படங்களுக்கு வரவேற்பும் கிடைக்கும். 

தொழில் வளர்ச்சி என்பது மிகவும் நன்றாக உள்ளது. இப்பொழுது ஃபோனில் படம் எடுக்கும் அளவிற்கு ஆரம்பித்து விட்டோம். டெக்னாலஜி வாழ்ந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே கிடையாது. அதற்கு ஏற்றார் போல் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் அப்டேட்டாக இருப்பது நல்லது. ஏஐ தொழில் நுட்பத்தால் பிரச்சனை இருக்கின்றது. இதை நாம் லிமிடெட் ஆக யூஸ் செய்து கொள்ள வேண்டும். இந்த தொழில் நுட்பத்தில் நல்லதும் செய்யலாம். படைத் தலைவன் படத்தில் விஜயகாந்தை காண்பித்து உள்ளனர். ஏஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி தான் அது. இதுபோன்ற நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நடிகர் விஜய் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடராஜ், அது அவருடைய தனிப்பட்ட  விருப்பம். அரசியலுக்கு வந்து விட்டார். பொதுக் கூட்டங்கள் போட்டு விட்டார். என்னை பொருத்தவரைக்கும் அவர் நடித்துக் கொண்டே அரசியல் பண்ணலாம். அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் மன வருத்தமாக உள்ளது என்றார்.

தமிழில் நிறைய பிரமாண்டமான படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்போது வந்து கொண்டு இருக்கிற படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமான படங்கள் தான். அது கண்டன்ட்டை வைத்து தான் நீங்கள் பார்க்க வேண்டும். ’கங்குவா’ ஒரு நல்ல படம். கடின உழைப்புடன் எடுத்து இருக்கின்றார்கள். கண்டிப்பாக இரண்டாம் பாகம் வந்தால் புரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. மொத்தமாக பார்த்தால் தான் அது தெரியும். அதை பார்க்காமல் முதல் பாகத்தை வைத்து முடிவுக்கு வருவது சரியல்ல. பாகம் இரண்டு வரும்பொழுது அதற்கான விஷயங்கள் தெரிய வரும் என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow