This Week OTT Release: கருடன், மிர்ஸாபூர் சீசன் 3... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ!

சூரியின் கருடன், மோகன் நடித்துள்ள ஹரா ஆகிய படங்கள் இந்த வாரம் (ஜூலை 5) ஓடிடியில் வெளியாகின்றன. இதனுடன் மிர்சாபூர் சீசன் 3 உள்ளிட்ட சில முக்கியமான வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

Jul 5, 2024 - 16:32
Jul 5, 2024 - 17:46
 0
This Week OTT Release: கருடன், மிர்ஸாபூர் சீசன் 3... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஜூலை 5 ஓடிடி ரிலீஸ்

சென்னை: ஓடிடி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த கருடன் திரைப்படம், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த கருடன், மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் லீட் ரோலில் நடித்திருந்தனர். மே 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான கருடன், விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் மாஸ் காட்டியது. விடுதலைக்குப் பின்னர் ஹீரோவாக சூரிக்கு கம்பேக் கொடுத்த கருடன், தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ஓடிடியிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.  

அதேபோல், மோகனின் ஹரா திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 1980களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்த மோகன், பல வருடங்களாக ஃபீல்ட் அவுட்டில் இருந்தார். தற்போது விஜய்யின் தி கோட் படத்தில் வில்லனாக நடித்து வரும் மோகன், மீண்டும் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தான் மோகன் ஹீரோவாக நடித்த ஹரா, ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் ஸ்ரீ இயக்கிய இப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் இந்த வாரம் வெளியானது. அதேபோல், விஜய் கனிஷ்கா, சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்த ஹிட் லிஸ்ட் படமும் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்த வரிசையில் மிர்சாபூர் இந்தி வெப் சீரிஸின் சீசன் 3, இந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியில் இதுவரை இரண்டு சீசன்களாக வெளியான மிர்சாபூர் வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. பங்கஜ் திரிபாதியின் நடிப்புக்காகவே இந்த சீரிஸை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். இந்நிலையில், குர்மீத் சிங், ஆனந்த் ஐயர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள மிர்சாபூர் சீசன் 3ல், பங்கஜ் திரிபாதியுடன் அலி ஃபசல், ஸ்வேதா த்ரிபாதி ஷர்மா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2 சீசன்களை போல, மூன்றாவது சீசனும் ஆக்ஷன் ப்ளஸ் கேங்ஸ்டர் ஜானரில் மிரட்டியுள்ளதாக ஓடிடி ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளத்தில் நிவின் பாலி, டிஜோ ஜோஸ் ஆண்டனி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாளி ஃப்ரம் இந்தியா (Malayalee from India) ஓடிடியில் வெளியாகியுள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் மே 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இதனால் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடித்த Malayalee from India படத்திற்காக ஓடிடி ரசிகர்களும் காத்திருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ள Malayalee from India ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தெலுங்கில் மார்க்கெட் மகாலட்சுமி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், இந்தியில் ஸ்ரீகாந்த் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாகியுள்ளன.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஸ்பேஸ் கேடட் (Space Cadet), Temptation Island படங்கள் அமேசான் ப்ரைம் தளத்திலும், Godzilla x Kong: The New Empire, The Man With 1000 Kids திரைப்படங்கள் நெட்பிளிக்ஸிலும் வெளியாகியுள்ளன. அதேபோல், Red Swan என்ற கொரியன் மூவி டிஸ்னி ப்ளஸ் தளத்திலும், Just Pass என்ற கொரியன் திரைப்படம் அமேசன் ப்ரைமிலும் வெளியாகியுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow