மடக்கப்பட்ட லாரி.. உள்ளே முழுக்க கேரள கழிவுகள்.. திருப்பூரில் பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு!
கேரளாவில் இருந்து மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவந்து பொன்னுச்சாமி என்பவர் கழிவுகளை இரவு நேரங்களில் வட்டல் தயாரிப்பதற்காக எரிப்பதாக தகவல்.
கழிவுகளை எரிப்பதால் அப்பகுதியில் சுவாசக் கோளாறு, தோல் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
லாரியை சிறைபிடித்த பொதுமக்களிடம் பொன்னுச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுசாமிடம் விசாரணை.
What's Your Reaction?