2026 தேர்தல் கணக்கு... விஜய்க்கு எதிராக அஜித்... திமுகவின் பலே ஐடியா!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் என்ட்ரி, திமுகவுக்கு தலை வலியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் அசராத திமுக, விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஒரு சம்பவம் செய்ய பிளான் செய்து வருகிறதாம். அது என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்......
கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் அஜித், சினிமாவில் மட்டுமல்லாமல் ரியல் லைஃபிலும் ஹீரோவாக கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில், அஜித்தின் ரேஸிங் டீம் மாஸ் காட்ட, ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என, வெள்ளித் திரையிலும் அஜித்தின் ஆக்ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன. அதோடு நடிகர் அஜித்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பத்மபூஷன் விருதும் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. கார் ரேஸ் வெற்றி, அடுத்தடுத்து 2 படங்கள், மற்றும் பத்மபூஷன் விருது என 2025 தொடக்கமே அஜித்துக்கு அமர்க்களமாக உள்ளது.
What's Your Reaction?