100வது ராக்கெட்டை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
GSLV-F15 ராக்கெட் மூலம் வழிகாட்டுதல் சேவையை வழங்கும் NVS-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. IRNSS-1E சாட்டிலைட்டுக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் NVS-02 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)