திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

Dec 29, 2024 - 20:12
 0
திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் (டிச.30) நாளை திறந்து வைக்கிறார்.

ஆய்வை தொடர்ந்து,  அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சர் ஆணைப்படி பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு 749.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கடந்த ஆண்டு மட்டும் 2 மிகப்பெரிய இயற்கை இடர்பாடுகளை நாம் சந்தித்திருக்கிறோம். ஒன்று மிக்ஜாம் புயல். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி  மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் மூலம் நமக்கு என்ன நெருக்கடிகள் உருவாகி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மிக்ஜாம் புயல் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள சேதங்களில் மதிப்பீடாக 19,692 கோடி ப் ரூபாய் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டுள்ள 24. 25 லட்சம் குடும்பத்தினருக்கு தல 6000 ரூபாய் வீதம் வழங்கி இருக்கிறோம். அதற்கு மட்டும் 1,487 கோடி ரூபாய் அரசு செலவளித்து இருக்கிறது.

மத்திய அரசிடம் இருந்து நாம் கேட்டிருந்த உதவி ஏறத்தாழ 19,692 கோடி ரூபாய் தென் மாவட்டங்களில் கடும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு 18,214 நிவாரண வழங்க வேண்டும் என்று நாம் ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்கிறோம்.நிதிச்சுமைக்கு நடுவில் தான் தொடர்ந்து வழங்கக்கூடிய ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாயை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அது நமக்கு மிகப்பெரிய நிதிச்சுமை இருந்தாலும் கவனமாக கையாண்டு அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.பொங்கல் பரிசுத் தொகையை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு வழங்குவதில் நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டால் கூட, முதல்வர் பொங்கல் தொகுப்பு பொருட்களுக்காக நிதி வழங்கியுள்ளார்.

வரக்கூடிய காலங்களில் நிதி நிலைமையை சீராக்கும் நடவடிக்கை வரும். வரக்கூடிய காலங்களில் நல்ல சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன். மகளீர் உரிமைத்தொகை  பெற்றுவரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரும். இந்த முறைமுறை முன்கூட்டியே பயன்பெறும் தாய்மார்களுக்கு வழஙகலாம் என்ற கருத்துரு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. முதல்வரின் ஆணையையும் அறிவுரையும் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow