மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!

மனவளர்ச்சி குன்றிய  கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Dec 21, 2024 - 10:23
 0
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி  வன்கொடுமை  வழக்கு... மேலும் இருவர் கைது..!
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆசைவார்த்தை கூறி வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு ஆகிய பகுதிகளில் உள்ள லாட்ஜ்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

iஇந்த வழக்கில்  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், திருவள்ளுரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ், பள்ளி மாணவவன், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் மணி, அஜித் குமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்னாப் ஷாட் மூலமாக மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூலமாக கல்லூரி மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதே போல மாணவியின் செல்போன் எண் மூலமாக மற்றவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் லாட்ஜ் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியிடம் மகிளா நீதிமன்ற நீதிபதி தனி அறையில் வைத்து நடந்த சம்பவம் தொடர்பாக முழுவதுமாக வாக்குமூலம் பெற்றார். 

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என மாணவிக்கும், கைது செய்யப்பட்ட நரேஷ் மற்றும் சுரேஷிற்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான நபர்களை பிடிக்க தனிப்படைகள் பல்வேறு மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தனிப்படை போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருத்தணியில் வசித்து வரும் கவி மற்றும் அம்பத்தூரை சேர்ந்த பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி ஸ்நாப் சேட் மூலமாக மாணவியிடம் பழகி விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow