பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்த ரசிகர்கள் சேவாக் உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின்' இறுதி போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொண்டார். ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், பேரூரில் உள்ள பட்டீஸ்வரம் திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த கோயில் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திய ஸ்தலமாகவும், கோயிலின் கட்டமைப்பு பல்வேறு கலை நுட்பத்துடன் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் உள்ள இந்த சிவன் கோவிலின் வரலாறை அறிந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் சாமி தரிசனம் செய்தார்.
நேற்றைய தினம் ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆண்டு, இறுதி சனி பிரதோஷ பூஜையில் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். இதனைக் கண்ட அங்கு இருந்த பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
What's Your Reaction?