வெளுத்து வாங்கும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே

IMD Weather Update : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென்காசி - மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

Jul 15, 2024 - 15:24
Jul 18, 2024 - 10:49
 0
வெளுத்து வாங்கும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே
today weather report

IMD Weather Update : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில்  ஓரிரு  இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை PAP (கோயம்புத்தூர்) , வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 9, சோலையார் (கோயம்புத்தூர்) 8, தேவாலா (நீலகிரி) 7, அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 6, கிளன்மார்கன் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS (கோயம்புத்தூர்) தலா 5, நாலுமுக்கு (திருநெல்வேலி), பெரியாறு (தேனி), செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி) தலா 4, எமரால்டு (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி), பாலமோர் (கன்னியாகுமரி), கடனா அணை (தென்காசி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. 

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (15.07.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய தினம் (16.07.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.21ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -  26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -  26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow