தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. தொடங்கி வைத்தார் சட்டத்துறை அமைச்சர்..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

Jan 4, 2025 - 08:17
Jan 4, 2025 - 09:05
 0
தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. தொடங்கி வைத்தார் சட்டத்துறை அமைச்சர்..!
தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

தச்சங்குறிச்சியில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளை திமில் மீது ஏறி அடக்கும் காளையர்களை பார்ப்பதற்கே ஆண்டுதோறும் பெரும் கூடுகிறது. 

வீரமிகுந்த ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டம் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், அதிகப்படியான வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிகப்படியான காளைகளை வளர்க்கும் மாவட்டமாகவும் மாடுபிடி வீரர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகும் புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. 

ஆண்டுதோறும், முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன்கள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அதன்படி, இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகள், 300 வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் பார்வையாளர்கள் கேலரி, காளைகள் செல்லும் வழியில் இருபுறமும் தடுப்புகள், மருத்துவ முகாம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாது தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 750 காளைகள் களம் காண்கின்றன.

தமிழக அரசின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடக்கும் வண்ணம் வாடிவாசனை அமைப்பது. பார்வையாளர் மடம் அமைப்பது, கூடுதல் பாடி காடுகளைக் கொண்டு தடுப்பு வழிகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் இந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினரும், வருவாய்த்துறையினர் செய்து வந்துள்ளனர்.

அதேபோல 350-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் பாதுகாப்பு பணியிலும், காளைகளுக்கும், காளையர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவத் துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தயாராக உள்ளனர்.

முதலாவதாக தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய பங்குத்தந்தை சிறப்பு பிரார்த்தனை செய்ய, கோவில் காளை மேல தாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு வாடிவாசலிலிருந்து முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு காளையாக களம் கண்டது. 

இதில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையர்களுக்கும் இருசக்கர வாகனம், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் போட்டி நடைபெறும் பகுதியை மாவட்ட ஆட்சியர் அருணா இரு முறை வந்து ஆய்வு செய்து, எந்த விதத்திலும் பாதுகாப்பு குறைபாடு இருக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow