கேள்வி கேட்கும் வணிகர்களை ஆணவப் போக்குடன் அவமதிப்பதா?.. கொந்தளித்த ராகுல்காந்தி

கோடீஸ்வர நண்பர்களுக்காக விதிகளை மாற்றி சிவப்பு கம்பளம் விரிக்கிறது மோடி அரசு. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினால் அவமதிக்கிறார்கள்.

Sep 13, 2024 - 13:10
Sep 13, 2024 - 13:24
 0
கேள்வி கேட்கும் வணிகர்களை ஆணவப் போக்குடன் அவமதிப்பதா?.. கொந்தளித்த ராகுல்காந்தி
Rahul Gandhi Condemns BJP Annapoorna Restaurant in Coimbatore


ஜி.எஸ்.டி. வரி பற்றி கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோடீஸ்வர நண்பர்களுக்காக விதிகளை மாற்றி சிவப்பு கம்பளம் விரிக்கிறது மோடி அரசு. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினால் அவமதிக்கிறார்கள். 

கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமையன்று தொழில் முனைவோர் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சினைகளை கோவையின் பிரபல தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டி பேசினார்.

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18% ஜிஎஸ்டியா? என பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோ சர்ச்சையான நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அவர் ஜனரஞ்சகமாக பேசியதால் அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை என பதிலளித்தார். 

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரியுள்ளார்.அதாவது, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னபூர்ணா சீனிவாசன் நேரில் சந்தித்தார். அப்போது "ஹோட்டல் அசோசியேசன் சார்பில் என்னை பேசச் சொன்னார்கள் நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன் ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.

நீங்க வயதில் பெரியவங்க, தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என இருக்கையிலிருந்து எழுத்து நின்று இரு கைகளையும் கூப்பி நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரினார்.

கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், மத்திய அமைச்சரிடம் ஜிஎஸ்டி வரி முறையைக் கேட்கும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடன் மற்றும் முற்றிலும் அவமரியாதையுடன் சந்திக்கப்படுகிறது.

ஆயினும்கூட, ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, ​​மோடி ஜி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் மேலும் அவமானத்தை சந்தித்துள்ளனர். அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, ​​​​அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவமானமாகத் தெரிகிறது.

MSMEகள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என சிறு, குறு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மோடி அரசு ஆணவப் போக்குடன் சிறு வணிகர்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow