தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4000.. ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை

சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உச்சத்தை தொட்டுள்ளது.

Sep 13, 2024 - 11:57
Sep 13, 2024 - 13:39
 0
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4000.. ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை
chennai to madurai omnibus ticket price

பண்டிகை, தொடர் விடுமுறைக் காலங்களில், ஆம்னி பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிகக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இரு மடங்குக்கு மேல் கட்டணம் செலுத்தி, டிக்கெட் புக் செய்து விட்டால் மட்டும் பயணம் அவ்வளவு எளிதாகி விடுவதில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து நகரத்தை கடக்க நரக வேதனை அனுபவிக்க வேண்டி இருக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோர்  வேலை மற்றும் தொழிலுக்காகச் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள், வார இறுதி, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கட்டாயமாக அனைவரும் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கின்றனர்.

3 அல்லது 4 நாட்கள் விடுமுறை கிடைத்தாலே மதுரை, கோவை, நெல்லை என மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் ரயிலில் ரிசர்வேசன் செய்யாதவர்கள் நம்பியிருப்பது தனியார் பேருந்துகளைத்தான். தனியார் ஆம்னி பேருந்துகள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள் 

சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உச்சத்தை தொட்டுள்ளது.இன்று இரவு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம்  1900 முதல் அதிகபட்சம் 4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து  கோயம்புத்தூர் செல்வதற்கு குறைந்தபட்சம் கட்டணம் 2000 முதல் அதிகபட்சம் 4,500 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து  நாகர்கோயில் செல்ல  ரூ. 2500 முதல் 4500 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு குறைந்தபட்சம் 2000 முதல் 4200 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் 1515  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் விடுமுறையை சாதகமாகக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டண விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow