Chennai Electric Train Cancellation : மின்சார ரயில் சேவை ரத்து ஆகஸ்ட் 18 வரை நீட்டிப்பு.. முழு விவரம்!

Chennai Electric Train Service Cancellation Extend : சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரம் செல்லாது; பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். அதே வேளையில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையேயும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 13, 2024 - 13:00
Aug 13, 2024 - 16:42
 0
Chennai Electric Train Cancellation : மின்சார ரயில் சேவை ரத்து ஆகஸ்ட் 18 வரை நீட்டிப்பு.. முழு விவரம்!
Chennai Electric Train Service Cancellation Extend

Chennai Electric Train Service Cancellation Extend : தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே கூடுதலாக சில மின்சார ரயில்களையும் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.  அதே வேளையில் ஆகஸ்ட் 14 ம்தேதி வரை காலை 9.30, 9.45,10.00, 10.15, 10.30, 10.45, 11.00, 11.15, 11.30, மதியம் 12.00, 12.15, 12.30,12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மறுமார்க்கத்தில் பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே காலை10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 மற்றும் இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் மகளிர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் வரும் 14ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவையும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாததால் மேலும் 4 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 18ம் தேதி வரை மொத்தம் 55 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரம் செல்லாது; பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள்  கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். அதே வேளையில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையேயும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பல்வேறு மின்சார ரயில்களை ரத்து செய்துள்ளதால் சென்னை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow