Lubber Pandhu : ரொம்ப விஷேசமான பாடம்.. ‘லப்பர் பந்து’ சினிமாவிற்கு புகழாரம் சூட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்

Ravichandran Ashwin About Lubber Pandhu Movie : பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் க்ளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Sep 24, 2024 - 10:27
Sep 24, 2024 - 13:24
 0
Lubber Pandhu : ரொம்ப விஷேசமான பாடம்.. ‘லப்பர் பந்து’ சினிமாவிற்கு  புகழாரம் சூட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்
Ravichandran Ashwin About Lubber Pandhu Movie

Ravichandran Ashwin About Lubber Pandhu Movie : ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் ‘லப்பர் பந்து’ என்று கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும்போது தொடங்கும் கதை, 55 ரூபாய்க்கு விற்கும்போது முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அழகான கோர்வையான படம்.கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு என இரண்டரை மணி நேரத்தில் பல சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் இயக்குநர் என சினிமா விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் லப்பர் பந்து படத்தை விஷேசமான படம் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. 

எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன். ஆனால், இன்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் க்ளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.

கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் மையப்புள்ளியில் இருந்து விலகி, தான் சொல்ல விரும்புவதை தெரிவிக்க முனைகின்றன. அதனால்தான் ‘லப்பர் பந்து’ எனக்கு விசேஷமான படமாக தெரிகிறது. மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்” இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow