வங்க கடலில் புதிய காற்றழுத்தம்.. இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..தமிழ்நாட்டில் வெயில் சுடுமாம்!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Sep 13, 2024 - 11:04
Sep 13, 2024 - 13:47
 0
வங்க கடலில் புதிய காற்றழுத்தம்.. இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..தமிழ்நாட்டில் வெயில் சுடுமாம்!
new pressure in the bay of bengal

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா அருகே கரையை கடந்த நிலையில், ஏற்பட்ட பெரும் மழை, வெள்ளப்பெருக்கால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமேற்கு வங்கக்கடலை ஒட்டிய மாநிலங்களின் பகுதிகளில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14.09.2024 முதல் 18.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தமிழகத்தில்  அதிகபட்ச வெப்பநிலை  ஓரிரு இடங்களில் 2°-3°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow