டாட்டூக்கள் மூலம் எச்.ஐ.வி பரவ வாய்ப்பு.. புற்றுநோயியல் நிபுணர் பகிர்ந்த பகீர் தகவல்
டாட்டூக்கள் போடுவதற்கு பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற ஊசியின் மூலம் எச்.ஐ.வி நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் ரத்னா தேவி தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது உடல்களின் டாட்டூக்கள் போட்டுக் கொள்வது மிகவும் பிரபலமாக மாறி வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் டாட்டூவின் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டாட்டூ போட்டுக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குமுதம் செய்திகளுக்கு கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் (நேடியேஸன் ஆங்காலஜிஸ்ட்) மருத்துவர் ரத்னா தேவி பிரத்யேக பேட்டியளித்திள்ளார்.
அவர் கூரியதாவது, டாட்டூக்களில் பலவிதம் உள்ளது. குறிப்பாக டாட்டூக்களில் பலவகையான சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு, வெள்ளை, சிவப்பு என பல வகை வண்ணங்களில் இந்த சாயங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாயங்கள் மூலம் பலவகையான நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியான முறையில் டாட்டூக்கள் போட்டுக் கொள்ளாத பட்ச்சத்தில் உடல்களில் அலர்ஜி, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், மற்றும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் டாட்டூக்கள் போடுவதற்கு பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற ஊசியின் மூலம் எச்.ஐ.வி நோய் பரவுவதற்க்கு வாய்ப்பு உள்ளது.
பெண்கள் தங்கள் மார்பகங்களில் போடக்கூடிய டாட்டூவால் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மருத்துவ சிகிச்சையின் போது முறையற்ற மருத்துவ தகவல்கள் பெறப்படுவதால் சிகிச்சை முறையில் சிக்கல் ஏற்படுகிறது. முடிந்தவரை உடல்களில் அதிகப்படியான டாட்டூக்கள் போட்டுக்கொள்தை தவிர்க்க வேண்டும். உடல்களில் ஒன்று, இரண்டு டாட்டூக்களை மட்டுமே போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். டாட்டூக்களில் வண்ண சாயங்களை உபயோகிக்ககூடாது. டாட்டூக்கள் போடுபவர்களுக்கான முறையான வழிமுறைகளை உலக சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
டாட்டூக்களை போட்டுக் கொள்வதற்கு முன்பாக முறையான மருத்துவரை அணுகி உடல் ரீதியான பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியமான ஒன்று. குறிப்பாக நாக்கில் விதவிதமாக டாட்டூக்கள், வளையங்கள் போட்டுக்கொள்வதாளும் பல்வேறு வடிவங்களை நாக்கை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாலும் பெரிய அளவிலான ஆபத்துக்களை சந்திக்க நேரிடும். நாக்கில் சுவைக்கும் திறன் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. முறையான பயிற்சி இல்லாத அங்கீகரிக்கப்படாத டாட்டூ மையங்களை பொதுமக்கள் நாடக்கூடாது என்று கூறினார்.
What's Your Reaction?