அடேய்... நீ ஓடுனா மட்டும் விட்ருவோமா? தப்பித்த காதலனை தேடி பிடித்து திருமணம் செய்த காதலி!

திருமண நாளன்று ஓட்டம் பிடித்த மணமகனை மீண்டும் அழைத்து வந்து திருமணம் செய்துகொண்ட மணமகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Oct 3, 2024 - 16:05
 0
அடேய்... நீ ஓடுனா மட்டும் விட்ருவோமா? தப்பித்த காதலனை தேடி பிடித்து திருமணம் செய்த காதலி!
தப்பித்த காதலனை தேடி பிடித்து திருமணம் செய்த காதலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியைச்  சேர்ந்தவர் ஸ்ரீதரன் இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே ஐடி நிறுவனத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச்(SC) சேர்ந்த அனுசியா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். வேறு சமூகம் என்று தெரிந்தும் ஸ்ரீதரன் மற்றும் அனுஷ்ய ஆகிய இருவருக்கும் இருவீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதனையடுத்து பத்திரிக்கை அடித்து கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மண்டபத்திலிருந்து மணமகன் ஸ்ரீதரன் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் திருத்தணி காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி பிரிவில் புகார் அளித்தனர்.

திருத்தணி போலீசார் மணமகன் ஸ்ரீதரனின் குடும்பத்தார் ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணமகனை தேடி வந்தனர். இந்நிலையில் நிலையில் மணமகனை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண் ஐடி ஊழியரான அனுசியா திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அம்மன் கோவிலில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமகன் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மணமகன் ஸ்ரீதரனுடன் அனுசுயா ஆஜரானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இருவிற்றார் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுருத்தப்பட்டடனர். 

மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பெங்களூருவில் காதலித்து பெரியோர் முன்னிலையில் நிச்சயம் செய்யப்பட்டு திருமண நாள் அன்று மண்டபத்தில் இருந்து மாயமான ஐடி மணமகனை திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் ஆஜரான பெண் ஐடி ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow