சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, லூப் சாலையில் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்களிடம் அங்கிருந்து கலைந்து போகக்கூறிய போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
மேலும், சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி போலீசார் காருக்குள் இருந்த தம்பதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரோந்து போலீசார் மிக இழிவாக பேசி தம்பதி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதில், போலீசார் நீங்கள் யார் என்று கேட்டதும், இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அவர், நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறேயா? என போலீசாரை மிரட்டும் தொணியில் பேசினார். வையாபுரி முஞ்சு, பல்லி மூஞ்சு என போலீசாரை கிண்டல் கேலி செய்தார்.
மேலும் அந்த நபர், ‘நான் குடித்து தான் இருக்கிறேன். என்னால் வண்டி எடுக்க முடியாது. உன்னால் முடிந்ததை பார்’ என மிரட்டல் விடுத்தார். நாளை காலையில், உங்களது முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன் என மிரட்டி அந்த நபர் இறுதியாக காரை வட்டமிட்டபடி எடுத்து சென்றார்.
தம்பதியினரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்நிலையில், அந்த தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோ கீழே: